புதன், 18 ஏப்ரல், 2012

பில்லா-2 ல் நடனமாடிய யுவன் சங்கர் ராஜா


தான் இசையமைத்துள்ள பில்லா-2 படத்தில் யுவன் சங்கர் ராஜா நடனமாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தல அஜீத்குமாரின் பில்லா-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான பில்லா-2 முன்னோட்டக்காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா நடனமாடியிருக்கிறார்.
இப்பாடல் காட்சி, ரசிகர்களை கவரும் விதத்தில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.
பில்லா-2ல் அஜித்திற்கு ஜோடியாக ஓமணக்குட்டன் நடித்துள்ளார். சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக