![]() |
வேட்டை படத்துக்கு பின் சமீரா ரெட்டிக்கு சொல்லும்படி வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் வரதநாயகா கன்னட படத்தில் சுதீப் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது.![]() இப்படத்தில் நடிக்க சமீராவுக்கு ரூ.38 லட்சம் சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கன்னட பட உலகில் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை சம்பளம் பெறும் ஒரே நடிகை திவ்யா மட்டும்தான். உபேந்திராவுடன் சூப்பர் படத்தில் நடிக்க ரூ.50 லட்சம் சம்பளமாக பெற்றார் நயன்தாரா. அவரது சம்பளத்தை யாராலும் நெருங்க முடியவில்லை. ஆனால் தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வரும் திவ்யாவின் சம்பளத்தை சமீரா நெருங்கியிருப்பதால் மற்ற நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி சமீரா ரெட்டி கூறும் போது, தென்னிந்திய சினிமாவில் எனக்கென இருக்கும் மார்க்கெட் வேல்யூவை பார்த்துதான் தயாரிப்பாளர்கள் சம்பளம் தருகிறார்கள். கன்னட படத்தில் யாரும் வாங்காத சம்பளத்தை நான் வாங்கிவிடவில்லை. எனது திறமைக்கேற்ற பணம் எனக்கு கிடைக்கிறது. ஆனால் அது எவ்வளவு என்பதை கூற முடியாது என்றார். |
வியாழன், 5 ஏப்ரல், 2012
அதிக சம்பளம் பெறும் சமீரா ரெட்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக