வியாழன், 5 ஏப்ரல், 2012

ஐஸ்வர்யாவை பார்த்து அதிர்ந்து போன தனுஷ்


3 படத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திடீரென இயக்குனர் ஐஸ்வர்யா வந்ததை பார்த்ததும், தனுஷ் அதிர்ந்து போய் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் சென்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு எப்.எம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குறிப்பிட்ட வானொலி நிலையத்துக்கு தனுஷ் சென்றுள்ளார்.
வரும் போதே ஸ்ருதியுடன் மட்டும் தான் வந்தாராம் தனுஷ். சிறிது நேரம் கழித்து இவர்களுடன் வந்து இணைந்திருக்கிறார் அனிருத்.
மூவரும் உட்கார்ந்து படத்தை பற்றி தொகுப்பாளருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு தகவலே சொல்லப்படவில்லை.
ஆனால் விஷயத்தை கேள்விப்பட்ட ஐஸ்வர்யா யாரும் அழைக்காமலே அங்கு வந்து நிற்க, முதலில் அதிர்ந்தவர் தனுஷ் தானாம்.
முகமெல்லாம் சிவந்து போனவர், இதோ ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு வர்றேன் என கூறிவிட்டு எழுந்து போனவர் திரும்பி வரவே இல்லை.
அவர் திரும்பி வருவார் என்ற காத்திருந்த தொகுப்பாளருக்கும், மற்றவர்களுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக