வியாழன், 5 ஏப்ரல், 2012

முதன் முறையாக தமிழில் அமிதாப்


பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனை தமிழில் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தும், அது எதுவும் வெற்றி பெறவில்லை.
தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் ஆகியோர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அமிதாப், அவர்களுடைய படத்தில் கூட நடிக்கவில்லை.
தற்போது கூடிய விரைவில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
காமராஜர் மற்றும் காந்தி வாழ்க்கையை படமாக்கிய பாலகிருஷ்ணன் அடுத்து இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை மையப்படுத்தி புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இதில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க பேசி உள்ளாராம். அமிதாப்புக்கும் கதை பிடித்து போய் உள்ளதால், இப்படத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக