வியாழன், 5 ஏப்ரல், 2012

நயன்தாரா குறித்து பேச விருப்பமில்லை: பிரபுதேவா


நயன்தாராவுடனான காதல் பிரிந்தது குறித்து நாயகன் பிரபுதேவா பேச மறுத்துள்ளார்.
நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்கும் நயன்தாரா, இதுகுறித்து அளித்த பேட்டியில், பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டு கொடுத்தேன்.
திருமணம் வரை சென்ற எங்கள் காதல் தற்போது முறிந்து விட்டது என்றார்.
உலகில் நிலையானது எதுவும் இல்லை. பிரபுதேவாவுடன் பழகிய போது நூறு சதவீதம் உண்மையாக நடந்தேன்.
அதற்கு மதிப்பு இல்லை எனும் போது உறவை முறித்துக் கொள்வதை தவிர வேறு வாய்ப்பு என்னவாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
நயன்தாராவுடனான காதல் முறிவு குறித்து பிரபுதேவாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது என்னைப்பற்றி நிறைய செய்திகள் வெளி வருகின்றன.
எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியும். மேலும் என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
வெளிப்படையாக இந்த வதந்திகளுக்கு என்னால் பதில் கூறினால், சிலர் மனது காயப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை.
இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். நடந்த என் சொந்த விடயங்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை.
காதல் பற்றிய விடயங்களை வெளிப்படையாக பேசாததற்காக எனது ரசிகர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மேலும் இக்கட்டான நேரத்தில் தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக