திங்கள், 9 ஏப்ரல், 2012

திவ்யபாரதியின் வாழ்க்கை படமாகிறது


மர்மமான முறையில் பால்கனியிலிருந்து விழுந்து மரணம் அடைந்த திவ்யபாரதியின் கதை படமாகிறது.
தமிழில் நிலாப் பெண்ணே என்ற படத்தில் அறிமுகமானவர் திவ்யபாரதி. தெலுங்கில் பொப்லிராஜா, ரவுடி அல்லுடு மற்றும் இந்தியில் தீவானா, பல்வான், கீத் உட்பட பல்வேறு படங்களில் நடித்தார்.
1990ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான இவர் 3 வருடங்கள் மட்டுமே நடித்தார். மும்பையில் 5 மாடி அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்த இவர், 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் திகதி திடீரென்று பால்கனியிலிருந்து விழுந்து மரணம் அடைந்தார்.
இவர் தற்கொலை செய்துகொண்டாரா, மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது மர்மாகவே உள்ளது. சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தி டர்ட்டி பிக்சர் படம் உருவானது.
அப்படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது திவ்யபாரதி வாழ்க்கையை படமாக்க பாலிவுட் இயக்குனர் திட்டமிட்டுள்ளார். விக்ரம் சந்து தயாரித்து இயக்குகிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, இளம்பெண் ஒருவர் ஒரே இரவில் பிரபல நடிகையாகிறார். சிறிய டவுனில் தொடங்கிய அவளது வாழ்வு பின்னர் எப்படி பிரபலமாகிறது.
திடீரென்று அவர் மரணம் அடைவது ஏன் என்பதை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. இது நிஜ சம்பத்தின் பின்னணியில் அமைந்த கதை போல் தெரிந்தாலும் மற்றவர்கள் குறிப்பிடுவது போல் குறிப்பிட்ட நடிகையின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட வில்லை. புதுமுக நடிகையே முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்றார்.
இந்த வேடத்துக்கு திவ்யபாரதி போல் முகத்தோற்றம் உள்ள ஒருவரை இயக்குனர் தேடி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக