![]() |
கொலிவுட்டில் சிம்பு, திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் காதலர்களுக்கு மத்தியில் இன்னும் பிடித்தமான திரைப்படமாக உள்ளது.![]() ஆனால் பாலிவுட்டில் இத்திரைப்படம் தோல்வியை சந்தித்தது. மேலும் இதுகுறித்து விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கௌதம் தனது டுவிட்டர் இணையத்தில், விமர்சகர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். எப்போதுமே என் படங்களுக்கு நல்லபடியான விமர்சனங்கள் வந்ததில்லை என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்ததால் மீண்டும் கெளதம் தனது இணையத்தில், பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்துவிடலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தை தடுத்துவிட முடியாது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.. என்று தெரிவித்திருக்கிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. |
சனி, 10 மார்ச், 2012
விமர்சகர்களால் எனது பயணத்தை தடுக்க முடியாது: கௌதம் மேனன்
சுவாரஸ்யமாக நகரும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படம்
![]() |
இதில் நாயகனாக 'தென்மேற்கு பருவக்காற்று' விஜய் சேதுபதி, அறிமுக நாயகி காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.![]() படத்தின் இணை தயாரிப்பாளர் சதீஷ், ஒளிப்பதிவாளர் பிரேம் குமார், இப்படத்தின் இயக்குனர் பாலாஜி ஆகியோர் நண்பர்கள். எனவே பிரேம் குமாரின் வாழ்க்கை அத்தியாயத்தை இயக்குனர் பாலாஜி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் சேர்த்துள்ளார். சுவாரஸ்யமான நாவலை படிக்க ஆரம்பித்து விட்டால் யாரும் முடிக்காமல் வைக்கமாட்டார்கள். அதே போல் படத்தின் திரைக்கதை நாவலைப் போல சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறியுள்ளார். |
காஜல் அகர்வால் பெயரில் டுவிட்டரில் போலிக் கணக்கு
![]() |
திரையுலக நட்சத்திரங்கள் இணைய தளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத் தளங்களை பயன்படுத்துகின்றனர்.![]() ஆனால், இந்த விடயத்தை சில சமூக விரோத கும்பல் மோசடியாகவும் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி, ரசிகர்களுடன் அவர்கள் பேசுவது போல் தொடர்பு வைத்துள்ளார்கள். பல நடிகைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது காஜல் அகர்வால் பெயரிலும் டுவிட்டரில் மோசடி நடக்கிறது. காஜல்அகர்வால் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் காஜல் அகர்வால் பேசுவது போல் மோசடி கும்பல் பேசி வருகின்றனர். ஆபாச கேள்விகளுக்கு பதில் சொல்வது போன்றும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதை உண்மை என்று நம்பி தொடர்பு வைத்துள்ளனர். இது குறித்த விடயம் காஜல் அகர்வால் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும் அவர் கோபம் அடைந்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக பயன்படுத்தி மோசடி நடிக்கிறது. மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார். |
மறுமுகம் படத்தின் காதல் நாயகன் அனுப்
![]() |
கொலிவுட்டில் ஆர்யாவுடன் வட்டாரம், சிக்கு புக்கு படங்களில் இணைந்து நடித்த அனுப், கத்தி கப்பல் படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.![]() இதுகுறித்து நாயகன் அனுப் கூறியதாவது, நான் எல்லா வகையான கதாப்பாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக முரட்டுத்தனமான சண்டைக் காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். இந்த 'மறுமுகம்' படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில், காதல் நாயகனாக நடித்துள்ளேன் என்று 'மறுமுகம்' படத்தின் நாயகன் அனுப் தெரிவித்துள்ளார். |
நியூயார்க்கில் எடுக்கப்படும் என்றென்றும் புன்னகை படம்
![]() |
கொலிவுட்டில் வாமனன் பட இயக்குனர் அஹமத், தமிழில் ஜீவா, த்ரிஷா இருவரின் நடிப்பில் 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்குகிறார்.![]() என்றென்றும் புன்னகை திரைப்படத்தை நியூயார்க்கில் நடத்த இயக்குனர் அஹமத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குனர் அஹமத் கூறியதாவது, இது எந்த வகை படம் என வகைப்படுத்த முடியாது. கலகலப்பான காதல் பொழுது போக்கு இசை சித்திரம் என்று கூறலாம். அப்பா-மகன் பாசப்பிணைப்பை பேசும் இப்படத்தில் நாசர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் லிசா ஹைடன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வருகிறார். தற்போதைய வாழ்க்கை சூழலை இப்படத்தில் பதிவு செய்கிறோம். நியூயார்க் மற்றும் ஷீசெல்சில் படக்காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளோம் என்று இயக்குனர் அஹமத் கூறியுள்ளார். |
அஜீத்தின் புதிய இயக்கம்
![]() |
ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் அஜீத். இவர் கடந்த பிறந்த தினத்தின் போது தன் பெயரில் இயங்கி வந்த ரசிகர் மன்றங்களை அதிரடியாக கலைத்தார். இதற்கிடையில் மன்றங்கள் மூலம் ஏழை மாணவ, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தொடர்ந்து வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் அஜீத்திடம் உதவி கேட்டு அடிக்கடி ரசிகர் மன்றங்கள் சார்பில் பலர் கடிதம் அனுப்பி வருகின்றனர். உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அஜீத் எண்ணி உள்ளாராம். அதற்காக அரசியல் தொடர்பில்லாத ஒரு இயக்கத்தை தொடங்க அஜீத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும், அப்போது அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. பில்லா 2 படத்தில் அஜீத் பிஸியாக இருப்பதால் அதன் படபிடிப்பு முடிந்த பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. |
விஜய்க்கு பதிலாக அஜ்மல்
![]() |
இயக்குனர் ருத்ரன், வெற்றி செல்வன் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜ்மலும், அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டேவும் நடிக்கிறார்கள்.![]() இந்நிலையில் சில பல காரணங்களால் விஜய் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக அஜ்மலை நடிக்க வைத்திருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. மதன் கார்கி பாடல் வரிகள் எழுத, மணிசர்மா இசையமைத்து வருகிறார். முன்னதாக இப்படத்திற்கு 3வது முறையாக தலைப்பை மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஏற்கனவே ரணம் என்று வைத்து, பின்னர் சத்யவான் என்று மாற்றி, இப்போது வெற்றி செல்வன் என்று வைத்திருக்கிறார். |
வெள்ளி, 9 மார்ச், 2012
த்ரிஷாவின் ரொமான்ஸ் த்ரில்லர் பட அனுபவம்
![]() |
தெலுங்கில் 'பாடிகார்ட்', 'டம்மு' படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போது தமிழில் இயக்குனர் திரு இயக்கத்தில் நாயகன் விஷால் நடிப்பில் 'சமரன்' படத்தில் நடித்து வருகிறார். . ![]() இந்தப்படம் பற்றி த்ரிஷா பேசுகையில் இந்த ஆண்டில் வெற்றி பெற்ற ''பாடிகார்ட்'' எனக்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. நான் நடித்துள்ள மாஸ் பொழுது போக்கு சித்திரமான 'டம்மு' அடுத்த மாதம் வெளியாகிறது. இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. என் சினிமா வாழ்க்கையில் 'சமரன்' குறிப்பிட வேண்டிய படமாக உள்ளது. இந்தப்படம் ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் நிறைந்த படமாகும். எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிற மாதிரியான த்ரில்லர் விஷயங்கள் இதில் உள்ளன என்று 'சமரன்' பட நாயகி த்ரிஷா கூறியுள்ளார். |
கடல் மேல் காதல் கொண்ட லட்சுமி மஞ்சு
![]() |
கடல் படத்தில் நடிப்பது பற்றி லட்சுமி மஞ்சு நேயர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் உற்சாகமாக பதில் அளித்துள்ளார்.![]() இந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக மணப்பாடு என்ற இடத்துக்கு சென்றேன். இந்த இடத்தின் பிண்னணியை பார்த்து மிகவும் பிரமித்துப் போனேன். வரிசையாக எழும்பி வரும் கடல் அலைகளை கண்டு காதல் கொண்டேன். கெளதம் கார்த்திக், சமந்தா, அரவிந்த் சுவாமி, அர்ஜுன் ஆகியோருடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று 'கடல்' பட நடிகை லட்சுமி மஞ்சு நேயர்களுக்கு பதில் அளித்துள்ளார். |
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது: ரேவதி
![]() |
'ரெட் பில்டிங் வேர் தி சன்செட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படம், திரைப்படம் அல்லாத பிரிவின் கீழ் சிறந்த படத்திற்கான விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. . ![]() நாங்கள் இப்படத்தை தயாரிக்கும் போது பெற்றோர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்துடன் தான் உருவாக்கினோம். எந்த விருதினையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எதிர்பாராத மகிழ்ச்சி என்றார் அவருக்கே உரித்தான புன்னைகையுடன். நடிகை ரேவதி ஏற்கனவே 'தேவர் மகனில்' நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினையும், ஆங்கில குறும்படத்திற்காக மற்றொரு தேசிய விருதினையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
அஜித்தை வைத்து படம் இயக்க போட்டி போடும் திரைப்பட இயக்குநர்கள்
![]() |
இந்தியில் சைப் அலிகான் நடித்து மிகவும் வெற்றி பெற்ற த்ரில்லர் நிறைந்த திரைப்படம் ரேஸ்.![]() இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரேஸ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை விஷ்ணுவர்தனிடம் தரலாமா என சிவா ஆலோசித்து வருகிறார். அதே நேரம், மங்காத்தாமூலம் தனக்கு பெரிய ஹிட் தந்த வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு தரலாமா என்றும் அஜீத் யோசிக்கிறாராம். சமீபத்தில் டுவிட்டரில் மீண்டும் அஜீத்துடன் பணியாற்ற விரும்புகிறேன் என நாசுக்காக அஜீத்திற்கு தகவல் அனுப்பியிருந்தார் வெங்கட் பிரபு. இதற்கிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜீத்தை இயக்குவது யார் என்பதில் மூன்று இயக்குனர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. |
திருமணம் குறித்து நாயகி நமீதா பேட்டி
![]() |
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகர்களுடன் நடித்த நடிகைகளுள் நமீதாவும் ஒருவர்.![]() இதன் மூலம் நீண்ட இடைவேளிக்கு பிறகு நாயகி நமீதா சினிமாவிற்குள் நுழைகிறார். இந்நிலையில் தன் திருமணம் குறித்து நமீதா பேட்டியளித்துள்ளார். தனது பேட்டியில், பெற்றோர்கள் என்னுடைய வருங்கால கணவரை தேடி வருகிறார்கள். என்னுடைய கணவர் கறுத்த நிறமுடையவராக, உயரமானவராக இருக்க வேண்டும். என் மீது அன்பு செலுத்துவதுவராகவும் என் நண்பர்களிடத்தில் இனிமையாக பழகுபவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். |
இயக்குனர் பாலாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: அதர்வா
![]() |
தமிழ் சினிமா உலகில் 'சேது','பிதாமகன்','நான் கடவுள்','அவன் இவன்' ஆகிய படங்களின் நடித்த கொலிவுட்டின் முன்னணி நாயகர்களின் தோற்றத்தை வித்தியாசமாக திரை ரசிகர்களுக்கு காண்பித்த இயக்குனர் பாலா.![]() இயக்குனர் பாலாவின் வழிகாட்டுதலில் நாயகன் அதர்வா உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து, உடற்பயிற்சி செய்து,கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி தன்னை கனகச்சிதமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடியும் வரை அதர்வா இதே 'கெட்டப்பில்' இருப்பார். அதர்வாவின் கதாபாத்திரம் ரகசியத்தை இதுவரையில் பாதுகாத்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் பாலாவின் படத்திற்காக படக்குழு கடினமாக உழைத்து வருகிறது. பாலா சாரின் இயக்கத்தில் நடிப்பது எனது கனவாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றியதில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இப்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறோம்' என்று 'எரிதணல்' பட நாயகன் அதர்வா கூறியுள்ளார். |
சினேகா பிரசன்ன திருமண திகதி அறிவிப்பு
![]() |
நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில், முதன்முதலாக ஜோடியாக நடித்தார்கள். . ![]() "நாங்கள் இருவரும் காதலர்கள் அல்ல நண்பர்கள், எங்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது" என்று கூறி வந்தார்கள். 2 மாதங்களுக்கு முன்பு பிரசன்னா, எனக்கும் சினேகாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் சந்தித்துப்பேசி, திருமணத்தை முடிவு செய்வார்கள் என்று காதல்-திருமண அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, சினேகா அமெரிக்காவில் இருந்தார். பிரசன்னாவின் காதல்-திருமண அறிவிப்பை அவர் மறுக்கவில்லை. அதன் பிறகு சினேகாவும், பிரசன்னாவும் சில நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டார்கள். கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் திகதி காதலர் தினத்தன்று இருவரும் ஜோடியாக போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தார்கள். காதலுடன், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள். சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது, சினேகா-பிரசன்னா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, இருவருக்கும் வருகிற மே 11-ந் திகதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன. "திருமணத்துக்குப்பின், சினேகா விரும்பினால் நடிக்கலாம். விரும்பவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அதில், நான் தலையிட மாட்டேன். வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்றார் பிரசன்னா. |
சூர்யாவுடனான வாய்ப்பை புறக்கனித்த டாப்ஸி
![]() |
சூர்யாவுடனான வாய்ப்பை புரக்கனித்ததற்கான காரணம் பற்றி இவர் கூறுகையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாற்றான்’ படத்தில் நடிக்க முதலில் என்னை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தனர்.![]() கொலிவுட்டில் நம்பர் 1 நடிகையாக வராதது ஏன்? என்கிறார்கள். தெலுங்கு, இந்தி படங்களிலும் நான் நடித்து வருகிறேன். அதில்கூட ஒரே நாளில் நான் பெரிய ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றுவிடவில்லை படிப்படியாகவே எனது வளர்ச்சி அமைந்திருக்கிறது. எனக்கு இன்னும் வயது இருக்கிறது சினிமாவுலகை விட்டு இப்போதைக்கு விலகிவிடப்போவதில்லை. எனக்கென்று ஒரு நேரம் வரும் அப்போது நல்ல இடத்தை பிடிப்பேன். இந்தியில் ‘சாஸ்மி பத்தூர்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தி எனது தாய்மொழி என்பதால் இப்படத்தில் நடிக்கும்போது எந்த டென்ஷனும் இல்லாமல் நடிக்கிறேன். தெலுங்கில் ‘குண்டல்லோ கோதாரி’ படத்தில் நடிக்கிறேன். 1980களில் நடக்கும் கதை அதற்கு ஏற்ப எனது காஸ்ட்யூம், நடிப்பு அமைந்திருக்கும். கிராமத்து பெண்ணாக நல்லது எது, கெட்டது எது என்று தெரியாத வேடம். இதில் எனது கதாபாத்திரத்தை நடித்து முடித்துள்ளேன். தமிழிலும் இப்படம் வெளிவர உள்ளது டாப்ஸி கூறியுள்ளார். |
இரண்டாம் உலகம் படத்தில் இரு வேடங்களில் ஆர்யா
![]() |
கொலிவுட்டில் செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.![]() இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும் பகுதி முடிவடைந்துள்ள நிலையில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கோவாவில் நடைபெறுகிறது. இரண்டாம் உலகம் குறித்து ஆர்யா கூறுகையில், சினிமாவில் வெற்றி பெற வேண்டுமென்றால் எலி மாதிரி வேகமாக ஓடுவது முக்கியமல்ல, ரொம்ப தூரம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும். நான் அதே மாதிரி ஓடுவதற்கு தயாராகிவிட்டேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும் எனக் கூறியுள்ளார். |
ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: மலேசியா பாண்டியன்
![]() |
போக்கிரி ராஜா என்கிற படத்தை தமிழில் வெளியிட இருக்கும் பட அதிபர் மலேசியா பாண்டியன். மலையாளத்தில் மம்முட்டி, ப்ருத்விராஜ், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் போக்கிரி ராஜா. அதாவது இப்படத்தில் நடிக்கும் போதே மலையாளத்தை தவிர வேறு எந்த மொழியிலும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்த படத்தில் ஸ்ரேயா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அதை மீறி மலையாள பட அதிபர் தாமஸ் ஆண்டனி, இப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய இருக்கிறார். எனவே இப்படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தை தமிழில், ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் வெளியிட இருக்கும் பட அதிபர் மலேசியா பாண்டியன், ஸ்ரேயா மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில், நான் தாமஸ் ஆண்டனியிடமிருந்து இப்படத்தை தமிழில் வெளியிட முறையாக பதிவு செய்திருக்கிறேன். எனக்கும் ஸ்ரேயாவுக்கு நேரடியாக எந்த ஒப்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கையில் என் திரைப்படத்தை அவர் தடை செய்ய முயற்சிப்பது எனக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனை மீறி இப்படத்தை எந்த ஒரு தனி நபரோ(ஸ்ரேயா) அல்லது எந்த ஒரு அமைப்போ என் படத்தை தடை செய்ய முயன்றால், எனக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அப்படி முயற்சிப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்பிரச்னையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தாமஸ் ஆண்டனியிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
தேசிய விருதுகள் கிடைக்காததால் கவலையில் மாலிவுட்
![]() |
59வது தேசிய விருதுகள் நேற்று புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டன.![]() இப்படத்தில் நடித்த அப்புக்குட்டி, சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். மேலும் ஆரண்ய காண்டத்திற்கு 2 விருதுகள் என்று தமிழ்த் திரைப்படங்கள் விருதுகளை அள்ளின. இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட வில்லை. இதனால் மலையாள திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ஆனால், பாலிவுட்டில் வெளியான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகை விருதை பெற்றார். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பியரி மொழியில் உருவான பியாரி படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் சுவீரனுக்கு சிறந்த இயக்குனர் விருதும், மராத்தி மொழித் திரைப்படமான தியோலில் நடித்த மலையாள நடிகை மல்லிகாவிற்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. |
சனி, 3 மார்ச், 2012
தாண்டவம் படம் பற்றி இயக்குனர் விஜய் பேட்டி
![]() |
கொலிவுட்டில் மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் ஆகிய வெற்றித்திரைப்படங்களை தொடர்ந்து விஜய் தாண்டவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.![]() நம்பிக்கைக்குரியவர்களால் ஏமாற்றப்படும் விக்ரம், அவர்களிடத்தில் போராடி வெற்றிபெறுவதே தாண்டவத்தின் திரைக்கதை என்று இயக்குனர் விஜய் கூறியுள்ளார். தாண்டவத்தின் படப்பிடிப்பு புதுடெல்லி, ஆக்ரா தாஜ்மஹால் ஆகிய இடங்களில் 25 நாட்கள் நடைபெற்றது. பின்பு அமெரிக்காவில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். யு.டிவி நிறுவனம் சார்பில் ரோணிஸ் ஸ்க்ருவாலா தாண்டவம் படத்தை தயாரிக்கிறது. விஜய் இயக்கும் படங்களுக்கு கொலிவுட்டில் தனிமதிப்பு உள்ளது. அந்த வகையில் தாண்டவத்தை கொலிவுட் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. ![]() ![]() ![]() ![]() |
புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ள நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம்
![]() |
கொலிவுட்டில் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.![]() பெங்களுரைச் சேர்ந்த காயத்ரி என்பவர் நாயகியாக நடிக்கிறார். இவர் ரேணிகுண்டா இயக்குனரின் “18 வயசு” மற்றும் “பொன்மாலைப் பொழுது” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். நான்கு நண்பர்களுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வேத்சங்கர் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் படித்தவர் ஆவார். பசங்க திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கோவிந்தராஜ் திரைப்படத்தை தொகுத்து வழங்கியுள்ளார். சிங்கம், பயணம் போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய கதிரின் உதவியாளர் ஜி.வீரமணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ![]() ![]() ![]() ![]() |
தயாநிதி தயாரிப்பில் நாயகன் மகத்
![]() |
இப்படத்தை மகத்தின் நண்பரும், தயாரிப்பாளருமான துரை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார்.![]() இப்படத்தை இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவியாளராக இருந்த ஆதிரூபன் என்பவர் இயக்குகிறார். இதில் நான் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் வருகிறேன். இப்போது படத்திற்கான நாயகி மற்றும் பிற தொழில்நுட்பர்களையும் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றும் இதன் படப்பிடிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மங்காத்தாவில் ஐந்து பேரில் ஒருவராக வந்ததால், மகத் தனியாக தெரியவில்லை. ஆனால் இப்போது கதாநாயகனாக அவதரிக்க இருப்பதால் தனது உடம்பை உடற்பயிற்சியின் மூலமாக மெருகேற்றி இருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளன |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)