செவ்வாய், 23 ஏப்ரல், 2013

இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றும் தெலுங்கு பட நாயகன்

கொலிவுட்டில் “சும்மா” என்ற படத்தில் பணியாற்றும் குழுவினர் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றி மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து இயக்குனரும் படத்தின் கதாநாயகனுமான மதன் கூறுகையில், நான் பார்வதிபுரம், கமனம் என்ற இரண்டு தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன்.
தற்போது சும்மா என்ற படத்தை இயக்கி, நடிக்கிறேன். இது காட்டிற்குள் நடக்கும் கொமெடி படம். படத்தின் மைய கரு மரம்வளர்ப்பு பற்றியது.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு தேனி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். அப்பொழுது அங்கு காடுகள் நல்ல பசுமையாக இருந்தன.
ஆனால் சிறிது நாட்கள் கழித்து அங்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது அங்கு காடுகள் நீர் இல்லாமல் கருகி நிலையில் இருந்தன.
மனமுடைந்த நாங்கள் இயற்கை வளங்கள் அழிவதை தடுக்க இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று 35 நாட்களில் 11 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து ஒரு லட்சம் கையெழுத்துகள் பெற்று அதை ஜனாதிபதியிடம் கொடுப்பதுதான் எங்கள் திட்டம் என்று கூறுகிறார்.
அவருடன் 5 பேர் பயணம் செய்கிறார்கள்.
செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்று நடுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மதன், தெலுங்கு நடிகரான டொக்டர் ராஜசேகரின் தங்கை மகன் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக