![]() |
இது குறித்து இயக்குனரும் படத்தின் கதாநாயகனுமான மதன் கூறுகையில், நான் பார்வதிபுரம், கமனம் என்ற இரண்டு தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன்.![]() படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்கு தேனி பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். அப்பொழுது அங்கு காடுகள் நல்ல பசுமையாக இருந்தன. ஆனால் சிறிது நாட்கள் கழித்து அங்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது அங்கு காடுகள் நீர் இல்லாமல் கருகி நிலையில் இருந்தன. மனமுடைந்த நாங்கள் இயற்கை வளங்கள் அழிவதை தடுக்க இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று 35 நாட்களில் 11 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து ஒரு லட்சம் கையெழுத்துகள் பெற்று அதை ஜனாதிபதியிடம் கொடுப்பதுதான் எங்கள் திட்டம் என்று கூறுகிறார். அவருடன் 5 பேர் பயணம் செய்கிறார்கள். செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்று நடுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மதன், தெலுங்கு நடிகரான டொக்டர் ராஜசேகரின் தங்கை மகன் ஆவார். |
செவ்வாய், 23 ஏப்ரல், 2013
இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றும் தெலுங்கு பட நாயகன்
பரஸ்பர விவாகரத்து பெற்றார் நடிகை ரேவதி
![]() |
தேர்தலில் கூட ஒருமுறை போட்டியிட்ட இவர் சமூகப் பிரச்னைகளில் அதிகமான அக்கறை காட்டி வருபவர் ஆவார்.![]() இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பின்பு இவ்வழக்கு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன் ஏப்ரல் 6ம் திகதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை இன்று ஏப்ரல் 22ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதன்படி இன்று இவர்கள் இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். |
அஜித்திற்காக காத்திருக்கும் நீத்து சந்திரா
![]() |
தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவேன் என்று பெரிதும் எதிர்பார்த்தவர் இப்போது பட வாய்ப்பின்றி இருந்து வருகிறார்.![]() ஆனால் தற்போது அஜித்துடன் நடிக்க காத்திருக்கிறேன். அதுமட்டுமின்றி இந்திய சினிமாக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த நாயகன் அஜித் தான் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ் ரசிகர்கள் மிகுந்த பாசமானவர்கள், தங்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஸ்டார்களை எந்தளவு கொண்டாடுகின்றனர் என்பதை இங்கு வந்த பின்பு தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார் |
கோச்சடையானின் டபுள் கெட்டப் ஸ்டில்கள் வெளியானது
![]() |
தற்போது முதன்முறையாக ரஜினியின் மகளும் 'கோச்சடையான்' படத்தின் இயக்குனருமான சவுந்தர்யா படத்தின் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.![]() ரஜினியின் இரட்டை வேடம் குறித்து சவுந்தர்யா கூறுகையில், படத்தில் தந்தையாக வரும் ரஜினிதான் 'கோச்சடையான்'. நாட்டின் படைத்தளபதியாக வருகிறார். பரதம் ஆடவும் தெரியும். மகன் ரஜினியாக வருபவர் பெயர் பாணா. தந்தையை காட்டிலும் நூறு மடங்கு வேகம் உள்ளவர் என்றும் எப்போதும் பரபரவென இருப்பார் எனவும் கூறினார். 'கோச்சடையான்' படத்தை யூலை மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஆங்கிலத்தில் வெளியான 'அவதார்', 'டின்டின்' படங்களை போன்று அனிமேஷன் படமாக 'கோச்சடையான்' தயாராகியுள்ளது. இதில் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர் போன்றோரும் நடிக்கின்றனர். மகன் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே வருகிறார். தந்தை ரஜினி ஜோடியாக ஷோபனா நடிக்கிறார். ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு எடுத்துள்ள இப்படத்தின் டப்பிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. |
தலைவா படத்தில் விஜய்யின் கதாபாத்திரம்
![]() |
இந்த படத்தின் சில புகைப்படங்களில் பாட்ஷா ரஜினி பாணியில் விஜய் போஸ் கொடுத்ததால், அப்படம் அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கலாம் என்று கணித்தார்கள்.![]() ஆனால், இப்போது அப்படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்கிற தகவலை ஆராய்ந்த போது, அவர் தமிழ்ப்பசங்க என்றொரு நடனக்குழுவுக்கு தலைவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பல ஊர்களுக்கு, நாடுகளுக்கு சென்று நடன நிகழ்ச்சி நடத்துவது தான் அவர்களது வேலையாம். மேலும், இந்த படத்தில் தமிழ்ப்பசங்க என்றொரு பாடலும் உள்ளதாம். தனது நடனக்குழுவின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள இப்பாடலை அவுஸ்திரேலியா சென்று படமாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
நவீன வசதிகளுடன் அம்பிகாவின் புதிய ஓட்டல்
![]() |
தாங்கள் நடிக்கும் காலத்திலேயே ஏ.ஆர்.எஸ்., கார்டன் என்ற ஸ்டூடியோவை சென்னையில் நடத்தி வந்தனர்.![]() மேலும் கோவளத்தில் அழகு சிகிச்சை மையத்தையும் நடத்தி வருகிறார் நடிகை ராதா. தற்போது சகோதரிகள் இருவரும் இணைந்து கேரளா, தமிழக எல்லையில் புளியரை என்ற இடத்தில் புதிதாக அதி நவீன வசதிகளுடன் கூடிய ஓட்டலை துவங்கியுள்ளனர். செங்கோட்டை, கொல்லம் மெயின் ரோட்டில் உள்ள இவர்களின் ஓட்டல், இந்த பகுதியில் படப் பிடிப்புக்காக வரும் படக் குழுவினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் சகோதரிகள். |
பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகையா? கடும் கோபத்தில் கோடம்பாக்கம்
![]() |
கோடம்பாக்கத்தில் இருந்து எந்தவொரு நடிகரோ, நடிகையோ படப்பிடிப்புக்காககூட இலங்கைக்கு செல்லக்கூடாது என்றொரு கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.![]() இந்த ஒரே காரணத்துக்காக அவரை தமிழ்ப்படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியில் தான் இயக்கியுள்ள ராமைய்யா வாஸ்தவைய்யா என்ற படத்தில் ஒரு நாயகியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைத்துள்ள பிரபுதேவா, இன்னொரு வேடத்தில் நடிக்க ஜாக்குலின் பெர்ணான்டஸ் என்றொரு சிங்கள நடிகையை நடிக்க வைத்துள்ளாராம். இந்த விடயத்தை இதுவரை ரகசியமாகத் தான் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் திரைக்கு வருவதால் வெளியில் கசிந்து விட்டது. அதோடு மேற்படி நடிகையும் ஊடகங்களுக்கு தான் கொடுக்கும் பேட்டிகளில் தனது வரலாற்றை சொல்லி விட்டதால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கொலிவுட் கலைஞர்கள் கடும் ஆவேசமடைந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகரான பிரபுதேவா, எப்படி ஒரு சிங்கள நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்கலாம் என்று சொல்லிக்கொண்டு, அவர் அடுத்து தமிழ்நாட்டுப்பக்கம் வரட்டும் என்று போர்க்கொடி பிடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்களாம். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)